பக்கம்:சிதறல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அல்ல அது. பொதுவாக இப்படிப் பேசக் கேட்டு இருக்கிறேன். அது பொய்; அவர்கள் அந்த விஷயத்தில் ஏமாளிகள் அல்ல; ஆனால் இந்த எழுத்து எழுதுபவர்களைச் சுலபமாக ஏமாற்றி விடலாம்.

'உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது' என்று சொல்லி விட்டால் போதும், அவ்வளவுதான். இந்த உலகத்தையே மறந்து விடுவார்கள்.

நான் அவர் ரசிகை. அதிலே எனக்கு ஒரு திருப்தி. அந்தக் காலத்திலே இதெல்லாம் ஒரு 'ஹாபி' என்றுதான் கூற முடியும்.

அவர் கவிதை நிறைய ‘காதலைப்’ பற்றி அதிகமாக இருக்கும். 'பாவம்' பரிதாபமாக இருக்கும். இந்த மனுஷன் ஏன் இதை இப்படிப் பாடி வைக்கிறார் என்று தோன்றும், அவருக்கு மணமாகவில்லை என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதுமுதல் அவரிடம் நெருங்குவது இல்லை. ஏன் நான் அவருக்கு ஒரு பிரச்சனையாக மாறக் கூடாது என்பதால் தான்.

அந்த முதல் பிரதியைப் பெறுவதோடு அவரிடமிருந்து விலகிக் கொள்வேன். அவர் மீது எனக்கு வெறுப்பு அல்ல. பாவம் நாம் ஏன் அவர் வாழ்க்கையில் குறுக்கே பாயவேண்டும் என்று நினைப்பேன்.

இந்த ஆண்கள் ஏமாளிகள். பாவம் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தன்னடக்கத்தை இழந்து விடுவார்கள். அப்புறம் அவர்களைப் போல ஒழுக்கப் பிரச்சனைகளை விவாதிப்பவர்கள் இருக்க மாட்டார்கள்.

அவரிடம் முதல் பிரதி வாங்கும் பழக்கம்தான் முதல் படத்தைப் பார்க்கும் பழக்கத்துக்குக் கொண்டு சென்று விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/28&oldid=1258289" இலிருந்து மீள்விக்கப்பட்டது