பக்கம்:சிதறல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நானும் படித்த நாட்களில் படம் பார்த்தது குறைவு; என் கணவைேடு வாழ்ந்த நாட்களிலும் குறைவாகவே படம் பார்த்தேன். ஆனால் இந்த முறிவு ஏற்பட்ட பிறகு படத்தைத் தவிர வேறு எதுவும் பார்ப்பதில்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் அம்மாவுக்கும் எனக்கும் எப்பொழுதும் ஒரே சண்டை; நான் எப்படியாவது, அவருக்கு அடிபணிந்து மன்னிப்புக் கேட்டு வாழ வேண்டும் என்பது. வாழாத பெண்கள் வாழ்க்கையில் தாழ்ந்து போவதை அவள் அனுபவத்தில் கண்டு இருக்கிருள். தனிமையை அனுபவிக்கும் பெண்கள் இனிமையை இழக்கிருர்கள். வாய்ப்பு நேரும் பொழுது தற்காப்பை இழந்து விடுவார்கள் என்பது அவள் நினைவு. என்னைத் தேடிக்கொண்டு பிறகுகூட கல்லூரிகளிலி ருந்து வருவார்கள். என் அம்மாவுக்கு அவர்களைப் பார்த் தால் பிடிக்காது. மழைவிட்டும் தூவானம் விடவில்லையே என்று வருந்துவாள். "அம்மா! அவர்கள் கவிதையை விரும்புகிருர்கள்" என்பேன். "உன்னை விரும்பவில்லை என்று சொல்ல முடியுமா' என்ற வழக்கம்போல வழக்கமான சொற்களைக் கொண்டு பேசுவாள்; "என்னை விரும்புகிருர்கள் என் கவிதைக்காக" என்று விளக்குவேன். ! அவர்களுக்கு எழுதிக்கொடு; அவர்கள் விரும்பில்ை படித்துக் கொள்ளட்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/87&oldid=825613" இலிருந்து மீள்விக்கப்பட்டது