பக்கம்:சிதறல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ஆபிசர் டிக்டேட் பண்ணுவதை நோட் எடுத்து டைப் செய்வது. அவள் ஆடவர்களோடு பழகிள்ை. அவள் அவ்வப்பொழுது புதிய அனுபவங்களைச் சொல்வாள். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். ஒரு ஆபீசர் அவரைத் திரைப்படத்துக்கு அழைத் தாராம். அவள், 'அதற்குச் சம்பளம் தரவில்லை. எழுது வதற்குத் தான் சம்பளம்' என்று பதில் சொன்னுளாம். பிறகு அந்த வேலையை விட்டு விட்டாளாம். அவளுக்கு சிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவள் கெடு வதற்குத் துணியவில்லை. அதை ஒரு பாவமாகக் கருது கிருள். "அவர்கள் விரும்புவதால் நாம் விரும்ப வேண்டும் என்பது இல்லை. நாம் விரும்பும் காலம் வரும்; அப் பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லுவாள். அவள் விருப்பம் நிறைவேறவில்லை. இன்னும் அவள் கன்னிப் பெண்ணுகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள் கிருள். அவளிடம் அந்தப் பழைய அழகு இப்பொழுது இல்லை. கவர்ச்சி அவளை விட்டு நீங்கி விட்டது. 'அம்மா! அந்தப் பெண் நீலாவுக்குக் கிடைக்கும் உரிமை' "அவள் மணமாகாதவள்’ அப்பொழுதுதான் தெரிந்தது; மணமாகாத கன்னிப் பெண்ணுக்கு இருக்கும் உரிமை கூட எனக்கு இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/92&oldid=825626" இலிருந்து மீள்விக்கப்பட்டது