பக்கம்:சிதறல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிரிப்பேன் சிந்திப்பேன்; சிந்திப்பேன் சிரிப்பேன், அந்த அனுபவத்தை ஒரு கவிதையில் எழுதியும் வைத்தேன். "நாங்கள் சிரித்துக் கொண்டே இருந்தோம் அப்பொழுது எதையும் சிந்திக்கவில்லை. நாங்கள் சிந்திக்கத் தொடங்கினுேம் பிறகு சிரிக்கவே முடியவில்லை சிந்தித்துச் சிரித்தோம் அதை மறக்கவே முடியவில்லை." பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் கிடைத்தன. நாங்கள் படித்த கல்லூரி அனுபவங்கள் எங்களுக்கு ஒரு காவியமாக நின்று நிலைத்துச் சுவைத்தன. "தமிழில் சமுதாய நாவல்களே எழவில்லை' என்று ஒரு திறய்ைவு ஆசிரியர் பேசுவார். வெறும் குடும்பங்களைப் பற்றித்தான் எழுதி இருக்கிறர்கள்' என்று பேசுவார் ஒரு ஆசிரியர். இந்த ஆராய்ச்சி மாணவர்கள் சிலர் ந்ாவலைப்பற்றி ஆய்வு செய்து வந்தார்கள். திரும்பத் திரும்ப ஒரு சில நாவலாசிரியர்களையே விமரிசித்து வந்தார்கள். பிற மாநிலங்களின் போக்குகளை யாரும் எட்டிக் கூடப் பார்த்தது இல்லை. அது மட்டும் இல்லை, தமிழில் புதிய எழுத்தாளர்களே உண்டாக முடியாது என்று நம்பி விடுகிருர்கள். திரைப்படம் தேங்கி விட்டது என்று தெளிவாகச் சொன்னேன். மக்களைப் புராண காலத்துக்கு இழுத்துச் செல்லும் கதைகளே எடுக்கப்படுகின்றன. அழுகை சிரிப்பு இந்த இரண்டைத் தவிரப் படங்கள் புதிய போக்கில் செல்வது இல்லை என்று பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/95&oldid=825632" இலிருந்து மீள்விக்கப்பட்டது