பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வினவுத்தரம் பல மொழிகளாகப் பிரிந்து பொருள் படத்தக்க ஒரு சொல்லையோ சொற்றொடரையோ எடுத்துக்கொண்டு, அம்மொழி களே விடைகளாமாறு வினாக்களை வினவி, அச்சொற்றெடரை யுங் கூறி முடிப்பது வினவுத்தமாகும். இதற்கு உதாரணம்:

1. பூமகள்யார் போவான யேவுவா னென்னுரைக்கும்

நாமம் பொருசாத்திற் கென்னென்பர்-தாமழகின் பேரென் பிறைகுடும் பெம்மா னுவந்துறையுஞ் சேர்வென் திருவேகம் பம்.” . . (கo)

இதற்குப் பொருள் :-பூமகள் யார் - செந்தாமரைப் பூவில் உள்ளவளாகச் சொல்லப்படுபவள் யாவள்? போவானை - ஓரிடத் திற்குச் செல்லுபவனை, ஏவுவான் என் உரைக்கும் - அவனை ஏவல் கொள்வோன் என்னென்று கூறுவான் ? பொரு சரத் திற்கு நாமம் என் என்பர் - போர் செய்யும் பாணத்திற்குப் பெயர் என்ன சொல்லுவார் ? அழகின் பேர் என் - அழகினை உணர்த்தும் பெயர் யாது ? பிறை சூடும் பெம்மான் - பிறைத் திங்களை முடியிற்சூடும் சிவபெருமான், உவந்து உறையும் சேர்வு என் - விரும்பி எழுந்தருளி யிருக்கும் தலம் யாது? திருவேகம்பம் - திருவேகம்பமாகும் (எ . று.) தாம் - அசை.

பூமகள் யார்? என்பதற்கு விடை, திரு. போவானை ஏவுவான் என்னுரைக்கும்? என்பதற்கு விடை, ஏகு. நாமம் பொரு சரத்திற்கு என்னென்பர் ? என்பதற்கு விடை, அம்பு. அழகின் பேர் என் ? என்பதற்கு விடை, அம். பிறை சூடும் பெம்மான் உவந்துறையுஞ் சேர்வென்? என்னும் வினவிற்கு விடை, திருவேகம்பம். -:

திரு+ஏகு+அம்பு+அம்=திருவேகம்பம்.

2. நீத்தொழிந்த வாறைத் தடக்கிப்பின் னிச்சயமே

வாய்த்தமைந்த வாயில்பெண் ணானையே கூர்த்தகு வாளேறோ டோசை விளைநில மிவ்வல்லாற் . . . கேளாயுடன்வருவதில்: (கக) நீத்தொழிந்த ஆறு-நிலை; ஐந்தடக்கி ஆமை; வாயில். கடை; பெண்ணானை - பிடி, வாளேறு- புண் ; ஓசை- இயம், விளை நிலம் - செய்; என்று பொருள் அமைந்து, நிலையாமை