பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) சக்கிர பந்தம் 549 னெச்சவீற் றுயிர்மெய்" என்ற நன்னூற் சூத்திர விதியா னென்க. - - r

8. " மாதவா போதி வரதா வருளமலா

பாதமே யோது சுரரை நீ தீதொழிய மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த் தாயே யலகில்லா யாம். : (க.க) இச்செய்யுளும் நான்காரைச் சக்கிரத்துள் ஆரையின் மேல் நந்நான் கெழுத்து நிற்பச் சுற்று வட்டத்தில் இருபத் தெட்டெழுத்துப் பொருந்தக் குறட்டில் வசுதாரை என்னும் பெயர் தோன்ற அமைவது காண்க.








நான்சாரைச் சக்கிர பந்தம்-III

இக்கவியின் பொருள் -அலகு இல் ஆய் ஆம் மாதவா.

அளவில்லாத வலிமை பொருந்திய பெரிய தவத்தையுடையோய்! போதி வரதா- மகா போதி (அரச மரம்) விருக்ஷத்தி னடியில் எழுந்தருளிய வரதனே! பாதமே ஓது சுரரை நீ தீது ஒழிய மாயா நெறி அளிப்பாய் - உனது இணையடிகளைத் தோத்திரஞ் செய்யும் சுரர்களுக்கு அன்னோர்தம் தீமை கெட அருளி அழி வில்லாத மோக்ஷ"பதவியைக் கொடுப்பாய்; இன்று - இப் பொழுது, அன்பு அகலாச் சீர்த்தாயே - தனது குழந்தைகள் மாட்டு அன்பு நீங்காத சிறப்பினையுடைய தாய். போன்றவனே (எமக்கும் அருள் செய்வாயாக) (எ .று) -