பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கள்) யாவரென்று வினவின், மலர் தூவி வணங்கி - மலர் களால் அர்ச்சித்து நமஸ்கரித்து, கற்றோர் நாளும் பரவும் - கற்ற வர்கள் தினமும் தோத்திரஞ் செய்யும், கநக அரி - கநகனாகிய இரணியனைக் கொன்ற திருமால், நக அரி - கிரெளஞ்ச மலையை அழித்த முருகவேள் ; காரி- மகாசாஸ்தாவாகிய ஐயனார் (எ - று)

இச்செய்யுளில், கநகாரி, நகாரி, காரி என்ற பெயர்கள், எழுத்துக்கள் ஒவ்வொன்று குறையப் பொருள் வேறுபட்டு நிற்ப, அப்பொருள்கள் இன்னவென்று விளங்கிக் கிடந்தவாறு காண்க. -

14. நிரோட்டம்

நிரோட்டமாவது, இதழ் முயற்சியாற் பிறப்பனவாகிய உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ என்னும் எழுத்துக்கள் வாராமற் பாடப்படுஞ் செய்யுளாம். -

நிரோட்யம் என்பது நிரோட்டம் என நின்றது. நிர் இன்மை ; ஓட்டியம் - ஓட்ட சம்பந்தமுடையது. ஓட்டம் - உதடு. இதனிலக்கணத்தை, ! உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ விவற் றியைபு, சேரா நிரோட்டத் திறத்து,' என்னுஞ் சூத்திரத்தா னுணர்க.

இதற்கு உதாரணம் :

1. சீலத்தான் ஞானத்தாற் றேற்றத்தாற் சென்றகன்ற காலத்தா லாராத காதலான் ஞாலத்தார் இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங் கச்சிக்கச் சாலைக் கனி. • * : - - - (உ௬)

இதன் பொருள் :-சீலத்தான் - ஒழுக்கத்தோடும், ஞானத் தான் - ஞானத்தோடும், தேற்றத்தான் - மனத் தெளிவாகிய சித்த சுத்தியோடும், சென்று அகன்ற காலத்தான் - மிக நீண்ட காலத்தோடும், ஆராத காதலான் - அடக்க அமையாத பக்தி யோடும், ஞாலத்தார். இவ்வுலகிலுள்ளார், இச்சிக்க - விரும்பி வணங்கவும், சால சிறந்து - மனம் வாக்குக்களுக்கெட்டாமல் மிகவும் பெரிதாய் விளங்கி, அடியேற்கு இனிதாம் - எளியேனாகிய எனக்குப் பேரானந்தமளிப்பதாகும், கச்சி கச்சாலை கனி காஞ்சீபுரத்தில் திருக்கச்சாலை என்னுங் கோயிலிலெழுந்தருளி யிருக்கும் கனி போன்ற கடவுளாகிய,சிவபெருமான் (எ று.)