பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

என வரும் வேறொரு வஞ்சித்துறையாக முடியும். நான்கடியிலுமுள்ள மற்றைய சீர்கள் சேர்ந்து, -

திரிபங்கி

"ஆத ரந்தீர் அன்னைபோ லினியாய் அம்பிகா பதியே மாது பங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண் முடியாய் ஏத முய்ந்தார் இன்னல்சூழ் வினைதீர் எம்பிரா னினியார் ஓது மொன்றே உன்னுவா ரமுதே உம்பர்நா யகனே"

"அம்பிகா பதியே

வம்புநீண் முடியாய் எம்பிரா னினியார் உம்பர்நாயகனே.” (௪o)

என மற்றொரு வஞ்சித்துறையாயிற்று.

இனித் திரிபங்கியின் மற்றொரு வகை:

சங்கந்தா பூணாரந் தாமே கலைதாநற் புங்கவன்மால் காணாப் புலவுடைய-கங்கரா கோணா கலாமதிசேர் கோடீர சங்கரா சோணா சலாசலமே தோ: - (௪௧)

இவ்வெண்பா, -

"பூணாரந் தாமே கலைதாநற் புங்கவன்மால் காணாப் புலவுடைய கங்கரா - கோணா கலாமதிசேர் கோடீர சங்கரா சோணாசலாசலமே தோசங்கந்தா" -

(௪௨)

என்று மற்றொரு வெண்பாவாகவும்,

"சலமேதோசங்கந்தா|பூணாரந் தாமே கலைதாநற் புங்கவன்மால் காணாப் - புலவுடைய கங்கரா கோணா கலாமதிசேர் கோடீர சங்கரா சோணா சலாசலமே"

(௪௩)