பக்கம்:சித்தி வேழம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - சித்தி வேழம் தாய் : ஆம்; அவனிடத்திலேதான் இவள் மயங்கியிருக் கிருள். - * - திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலே, மலரும் பன்னிரு நயனத் தறுமுகத் தமுதினே மருண்டே. - தோழி : இவள் கிலே எங்கே? அவன் கிலே எங்கே? இந்தப் பேதைப் பெண் எட்டாத கணிக்குக் கொட்டாவி விடலாமா? - - தாய் : இந்தப் பெண்ணின் துயரத்தை அவன் அறிய மாட்டான பன்னிரு நயனமும், ஆறு முகமும் உடைய அவன் அறியாதது ஏதும் இல்லை. அவன் தன் மார்பில் அணிந்த மாலையை இவளுக்கு அளிக்கவேண்டாம். தன் திருமுடியிலே அணிந்திருக்கும் தொங்கலேக்கூடத் தரவேண்டாம். அந்தக் கண்ணியில் உள்ள மலரின் புறவிதழில் இரண்டை எடுத்து இவளுக்கு அனுப்பக்கூடாதா? அதைப் பெற்று இவள் உயிர் தளிர்ப்பாளே! ஊரார் அறிந்து ஏசும்படியாக இவள் மட லேறும் பேச்சை எடுத்ததை அறிந்து, இந்தச் சிறிய கருணை யாவது செய்யக்கூடாதா? அதல்ை அவனுக்கு என்ன குறை வந்துவிடும் குடம்குடமாகப் பால் அருளும் வள்ளலே அந்தக் குடத்தைக் கழுவிய நீரையாவது தா என்று கேட்பதுபோல நான் கேட்கலாமென்று தோன்றுகிறது. அதைக்கூட அவன் தரமாட்டான்போல் இருக்கிறது. தொட்ங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற் புறவிதழ் ஆகிலும் அருளான். தோழி: புறவிதழாக இருந்தால் என்ன, அகவிதழாக இருந்தால் என்ன? அல்லது மாலேயாகவே இருந்தால்தான் என்ன? மலரும் இதழும் மாலேயுமா இங்கே குறிக்கோள்? அவன் இவள் காதலே ஏத்றுக்கொண்டான் என்பதற்கு அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/106&oldid=825704" இலிருந்து மீள்விக்கப்பட்டது