பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

'அதோ போகிறதே ஒரு 'சேவல் கோழி' , அது இந்தக் கோழியினுடைய பெரியப்பா' என்று பேசுவதை நாம் கேட்டிருக்கிறோமா? ஏன்? அன்பு, பாசம், பற்று, உறவின் முறை என்பவை எல்லாம் மனிதப் பிறவிக்குத்தான் உண்டு. விலங்கினங்கள் தனித் தனியாக வாழ்கின்றன. ஏனெனில், அவைகளுக்கு அறிவு இல்லாத காரணத்தால் உறவின் முறை கிடையாது.

அதனால் தான் ---

"ஏ, மனிதனே, நீ அப்படி வாழக்கூடாது. நீ சுற்றுத்தாருடன் கலந்து பேசிப் பழகி வாழ வேண்டும்", என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றார்கள்.


முற்றும்