பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

அடிக்கிறதே என்று அந்த மகான் துடிதுடித்துப் பாடுகின்றார்----

“மனம் எனும் தோணியற்றி .
மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி
செறி கடல் ஓடும் போது
மதன் எனும் பாறைத் தாக்கி
மரியும்போது அறியவொண்ணா
உனை உணும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே."

இந்த அரிய பாடலினால் மனத்தின் மிகப் பெரிய செயல் குறிக்கப்பட்டது, மனத்தில் தோன்றக்கூடிய அழுக்குகளைக் கண்டுகொண்டு நீக்குவதற்காகவே 'தியானம்' என்கின்ற ஒளிவிளக்கினைத் துணையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆதலால்தான் தியானத்தின் அடிப்படை இருப்பிடமாக இருப்பது மனமே என்று கூறப்பட்டது.

ஒருவன் ஒரு பெரியவரிடம் சென்று, இருட்டிலே. பணத்தினைக் காணாமல் போட்டுவிட்டேன் என்று கூறினான். அதற்கு அந்தப் பெரியவர் விளக்கு வெளிச்சத்தில் தேடிப் பாரப்பா என்று சொன்னார். உடனே அந்த ஆள் வெளிச்சத்தில் எல்லாம் போய்த் தேடிக் கொண்டிருந்தானாம். பெரியவர் சொன்ன வார்த்தைகளுக்கு அதுவா அர்த்தம்? வெளிச்சத்தில் தேடு என்றால், விளக்கினைக் கையில் வைத்துக்கொண்டு அந்த. வெளிச்சத்தில் எந்த இடத்தில், பொருளைக் காணாமல் போட்டு விட்டோம் என்று நினைத்தானோ அந்த இடத்தில் அல்லவா போய் தேட வேண்டும். அது வேபோல, இறைவன் தங்குகின்ற இடமான மனத்தில் அழுக்குகள் சேராதபடி தியானம் என்ற விளக்கினைக் கொண்டு