பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் இலட்சிய வாதிகள் பேனாப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனராம்! அவர் வீரர், தீரர், என்பதை யாரும் மறுக்கமாட் டார்கள். கிளர்ச்சிகள் அவருக்கு நிலாச் சோறு, கிறை வாசம் அவருக்குச் சகஜம். அவர் எதிர்ப்புக்கோ, ஏகாதி பத்தியத்தின் தாக்குக்குதலுக்கோ அஞ்சினவருமல்லர். கும்பலோடு சேர்ந்து சிறைக் கூண்டு போனவரு மல்லர். தேசியத்தின் போால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை, லோகமான்ய திலகருக்கு என்பார்கள். ஆனால் பிரிட்டிஷ். ஏகாதிபத்தியம்,திலகரைத் தீண்டுவதிற்கு முன்பே, தோழர் மா. சிங்காரவேலுவைத் தாக்கிவிட்டது. தேசீய ஆரவாத்தினால் இந்த உண்மை மறைந்துபட்டது. கான்பூரில் பொது உடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக் காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தோழர் சிங்காரவேலு வையும்,மெளலானா அசாத் மோகானியையுந்தான் முதல் முதல் கைது செய்தது. "தொழிலாளர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையையே, நாடு அறியும்படி முதலில் எடுத்துக் கூறிய பெருமையும், மா. சிங்காரவேலு உடைய தாகும் இங்கிலாந் திலே தொழிலாளர் கிளர்ச்சி ஆரம்ப மானபோதே, இங்கு இவர், அத்தகைய கிளர்ச்சியைத் துவக்கினார். NA 29 கூணன்போல் காணப்பட்ட இந்தியாவின் நிலையைக் கண்ட சிங்காரவேலு, முதுகெலும்பு வளைந்தால், கூணி டக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதைக் கண்டு