பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மருந்து மட்டுமே உங்கள் £ - L_6Ꮱ ᏮQ குணப்படுத்திவிட முடியாது. உங்கள் உடலுக்கு, ஒயா உழைப்பிலிருந்து ஓய்வு கொஞ்சம் தேவை! உங்கள் வயதையும், மன உழைப்பையும் நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? 'என்னால் ஓய்வு எடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாகப் பேசிவிட்டார் வைத்தியநாதன். வேறு ஏதாவதுயோசனை கூறவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். டாக்டரும் சரி என்று சிரித்துக்கொண்டே, அவர் முகத்தைப் பார்த்தார். அதிலே ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. மருந்தும் உணவும் மட்டும் உடலைப் பாதுகாத்து விடாது. ஒய்வும் உடற் பயிற்சியும்தான் உடலைப் பண்படுத்தும். பாதுகாக்கும். நீங்கள் காலையிலும் மாலையிலும் உடற் பயிற்சி செய்தால் நல்லது என்றார். உடற் பயிற்சியா! இந்த வயதிலா? என்னைப் போன்றவர்கள் உடலை வளைத்து, நிமிர்த்தி, குனிந்து பணிந்து செய்ய முடியுமா? அதற்கு நேரம்தான் உண்டா? என்று ஏளனமாகச் சிரித்துவிட்டு, உடற் பயிற் சிக்கு மாற்று ஏதாவது உண்டா? என்றும் கேட்டார். வைத்தியநாதன் வழிக்கு வரமாட்டார் என்று புரிந்து கொண்டார். குடும்ப டாக்டர் அல்லவா? அவரது குணாதிசயங்கள் புரியாமலா போகும்? உடலுக்குப் பயிற்சி என்றால் உறுப்புக்களுக்கு 'மசாஜ் பண்ணி விடுவதுதான். வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அதிலே உங்களுக்கு விருப்பமில்லை என்றால், மெதுவாக ஒடுங்கள். முடிந்தவரை, முடிந்த தூரம் ஒடுங்கள். காலையில் மட்டும் போதும். அல்லது