பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • கவிதை என்பதும் சளசள எனப் பேசுவதும் மாறுபட்ட இரு துருவங் களில் உள்ளவையாகும். கவிதையின் சாரம் சுருங்க உரைக்கப் பட்ட பொருளில் இருப்பதாகும்; அதனை நீர்த்துப் போகச்செய்வது

என்பது அதனைக் கொல்வதே ஆகும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • சொற்களை நாணயம் போல் அச்சிரும்.

கடினமானதாகவும், தெளிவானதாகவும், உண்மையானதாகவும் இவ்விதியை எப்போதுமே மீறாதே. சொற்கள் சிலவாக இருக்கும்போதும் சிந்தனைகள் பலவாக இருக்கட்டும். நிகலாய் நெக்ரசோ

  • கவிஞனின் பெருமை ஒளிவிரும் ஒலியழகில் உள்ளது.

ஆனால் ஒலியழகு ஆழமற்ற சொல்லினை வெறுக்கிறது.

சுலைமாண் ஸ்டால்ஸ்கி

  • குறிப்பாகப் பாடல்கள் எழுதுவதில்,புதுமையானதென்பது தோன்றி யவுடன் விரைவில் மறைந்துவிடுவதாகும். ஏ.என்.ராடிஉ;சேவ்
  • ஒர் உண்மையான கவிஞனை உருவாக்கும் இன்றியமையாத குணங்களில், புதுமை என்பதும் உறுதியாக இடம் பெற்றிருக்க வேண்டும். வேறு எவர் ஒருவரையும்விட, கவிஞன் என்பவன்

தனது காலத்திய ஒரு மகனாக இருக்க வேண்டும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • கவிதையின் மொழி என்பது, துல்லியமானதாகவும், சுருக்க மானதாகவும், தெளிவாகக் காட்சியளிப்பதாகவும், இசைத் தண்மை கொண்டதாகவும் இருப்பதாகும். விளாடிமிர் கோரோலெங்கோ