பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1451411. “எந்த ஒரு சிறு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வாழ்க்கையை இயக்குவது அறிவுடைமை.”

1412. “சில மனிதர்கள் தவறு செய்வதற்குக் காரணங்கள் கூற இயலாது. அது அவர்களுடைய சுபாவம்.”

1413. “உடுப்பது உண்பது இவற்றை எளிமைப் படுத்துவது அழுக்காற்றைத் தவிர்க்க உதவி செய்யும்.”

1414. “ஒருவரை அடியொற்றிப் பின்பற்றாமல் போற்றுவது ஒருவிதமான உணர்ச்சி. அதனால் பயன் இல்லை.”

1415. “இந்திய அரசியலில் ஜனநாயகப் பண்பு முழுமைத்துவம் அடையவில்லை.”

1416. “கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர்களே ஜனநாயகத்தில் கால் கொண்டு நிற்க இயலும்.”

1417. “இந்திய அரசியலில் நபர்களே முக்கியம். கொள்கை, கோட்பாடுகள் அல்ல.”

1418. “எந்த ஒன்றும் முறையாக நடவாது போனால் இழப்புக்களே வரும்.”

1419. “பாதுகாப்பு வேலைகள், வேலையாக மட்டும் அமையாமல் உணர்வு பூர்வமான கடமையாக அமைந்தால் நல்லது.”

1420. “ஜனநாயப் பண்புக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் இசைந்ததல்ல.”

1421. “கருத்து வேற்றுமைகள் கசப்புணர்ச்சியாக உருக்கொள்ளுதல் ஜனநாயக மரபுக்கு இசை வில்லாதது.”

த-10