பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

53


களும் தப்பாமல் வந்து சேரும். இங்ஙனம் பணி செய்வோர் உள்ள நிறுவனத்தில் ஊழல் வரவே வராது செல்வமும் நிறையசேரும்.”

431. “காதல் வாழ்க்கையில் கலவி ஒரு பகுதியேயாம். கலவிக்காகவே காதல் வாழ்க்கையல்ல.”

432. “நிதி வரவு இருந்தாலும் நிதி நிர்வாகம் முறையில்லாதுபோனால் தரித்திரம் தாண்டவமாடும்.”

433. “கணக்கு எழுதுதல், பட்டியல் அனுமதித்தல் என்பன நிதியை நிர்வகிக்கும் கணிகளேயாம்.”

434. “விவாதித்துத் தெளிவுபடுத்த இயலாதவர் வசை வழியைக் கையாள்வர்.”

435. “வயதைப் பற்றிக் கவலைப்படுவோர் வயதுக்குரிய அடிப்படையான விநாடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு விநோதம்.”

436. “கூழைக் கும்பிடுகள், குற்றவியல் மனத்தின் வெளிப்பாடுகள்-நம்பக்கூடாதன.”

437. “நம்பிக்கையின் அடிப்படையில் நிர்வாக விதிமுறைகள் புறக்கணிக்கத் தக்கனவல்ல.”

438. “சமுதாய அமைப்பு சீராக அமைய நன்றி பாராட்டும் பண்பு தேவை.”

439. “உழைப்பாளிகள், பிறரைச் சார்ந்து இருந்தால் தமது உழைப்பையும் இழப்பர்.”

440. “குறிக்கோள் அடையத்தக்க வகையில் பணிகளைச் செய்யாதவர் நன்மையையும் செய்யவில்லை. மாறாகத் தீமையைச் செய்கின்றனர்.”

441. “சிலரைத் திருத்துதல் முயற்கொம்பே.”

442. “எந்தக் குடும்பமும் திட்டமிட்டு வாழுமானால் வறுமையை அடையாது.”