பக்கம்:சிந்தனை வளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 107

இதற்குமேல் எதையும் கடிதத்தில் அவரால் எழுத முடியவில்லை என்ருலும் நண்பர்களிடம் தனிப்பட்ட முறை யில் சொல்லி அங்கலாய்த்து வருத்தப்பட முடிந்தது அவரால். -

அந்தப் பையனைவிடப் பிரமாதமான மார்க் திறமை எல்லாம் இருந்த 'ப்ரில்லியண்ட்” ஸ்டு டண்ட்ஸ் பல பேருக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷன் கிடைக்கலே. ஆனால், அவனுக்கு அட்மிஷன் கிடைக்கிறதிலேருந்து அவன் எம். பி. பி. எஸ். டிகிரி வாங்கிக் கொண்டு அமெரிக்கா போகிறவரை ஒரு பெரிய அரசியல்வாதியின் செல்வாக்கு அவனுக்குப் பின்னல் தனிப்பெரும் பக்கபலமாக நின்றது. நான் யாரையும் விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை . எனக்கு இன்னொரு டேர்ம்' வைஸ் சான்ஸ்லரா இருக் கணும்’ என்று நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் அந்த வி.வி. விவரத்தை ஆற்ருமையோடு சொல்லிக் கொண் டிருந்தார்.

துணைவேந்தர் பதவி என்பது, ஏறக்குறைய பல இந்திய மாநிலங்களில் அரசியல் கண்ணுேட்டத்துடன் கூடிய நியமனமாகவே இருப்பதால் (Political appointment) பல துணைவேந்தர்கள் இப்படி அறிவு, கல்வி இவற்றை விரோதித்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஆட்சியிலிருப் பவர்களையும், அ ர சி ய ல் செல்வாக்குள்ளவர்களையும் விரோதித்துக் கொள்ளக் கூடாது'-என்ற திட்டவட்டமான மனப்பான்மையுடன் செயல்படுவது வழக்கமாகிவிட்டது.

ஒரு பல்கலைக் கழகத்தில், ஒரு முக்கியமான துறையில் ஒரு பேராசிரியர் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டி யிருந்தது. முதல் வகுப்புத் தேர்ச்சியும், பத்து வருஷத் £1365á 6560 spurrundi, P. G. (Post Graduate) to #9 in முன்னனுபவமும், திறமையும் பி. எச். டி. யும் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்’-என்று முறையாகப் பத்திரிகை களில் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்கள் கோரப் பட்டன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/109&oldid=562351" இலிருந்து மீள்விக்கப்பட்டது