பக்கம்:சிந்தனை வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 3器演

களோ என்று கூடப் பயந்து நடுங்கி விட்டேன். எதிர் காலத்தைப் பற்றியே பயமாகி விட்டது.

ஆனால், இதெல்லாம் ஒருகணம்தான். மறுகணமே என் பழைய பிடிவாதம்தான் துணை நின்றது. சமூகத்துக்குப் பயன்படாத தனி நபர்களும், வக்கிரங்களும், வக்கரிப்புக் களும் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். எதை வேண்டுமானலும் நியாயப்படுத்தலாம். வளர்ந்து கொண் டிருக்கும் நாடு ஒன்றில் "எதையாவது எப்படியாவது மனப் பான்மையை அப்படியே கொழுக்க விட்டு விட்டால் அந்த, நாட்டுக்குத் தேசிய ஒழுக்கம் - அதாவது நேஷனல் காரெக்டர்’ என்ற ஒன்று உருவாக முடியாது. அணு விஞ்ஞானத்தைப் போதிக்கும் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானியிட மிருந்து நான் கற்க வேண்டியது நிறைய இருக்கலாம். மகளைத் தந்தை பெண்டாள யோசனை கூறும் யாரோ ஒரு. பிரெஞ்சு வக்கிரத்தைப் பற்றி நான் அறிந்து எனக்கோ என் நாட்டுக்கோ எந்த உருப்படியான பயனும் இல்லை.

அது மாதிரி போல்ட் தீம் எல்லாம் இங்கே வர வேண்டாமா?’ என்று கேட்பது பக்கத்து ஊரில் காலரா வந்திருக்கிறதே, அது நம் ஊருக்கும் கொஞ்சம். வேண்டாமா? கொண்டு வருவோமே என்று கேட்பதைப் போன்றதுதான்.

தலைவர்கள், எழுத்தாளர், பத்திரிகைகள், அரசியல் வாதிகள், டாக்டர்கள், இஞ்ஜினியர்கள் ஆகியோர்துணிந்து எதையாவது எப்படியாவது ம்னப்பான்மையைக் கை விட்டால்தான் மக்களைத் திருத்த முடியும்.

கண்ணில் பயிர்கள் தெரியாத அளவு களை மண்டி யிருப்பது போல் நமது சமூக வாழ்வை இந்த மனப்பான்மை கவ்விப் பிடித்து மூடியிருக்கிறது. இதிலிருந்து சமூகத்தையும். நம்மையும் விடுவிக்க அவசரமாக முயல வேண்டும். நியாய மான மார்க்கத்தில் முறையான வெற்றியை அடையும். பொறுமையையும், நிதானத்தையும் சிறுவர் முதல் பலருக் கும் மெல்ல மெல்லக் கற்றுத் தரவேண்டும். எதையாவது எப்படியாவது?’ பண்ணினுல் தான் தங்களைப் பிறர் கவனிப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/35&oldid=562277" இலிருந்து மீள்விக்கப்பட்டது