பக்கம்:சிந்தனை வளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 49%.

சமீப காலத்தில் வளர்ந்து வருகிறதோ என்று அஞ்சுகிறேன் நான் , -

நாகரிகம், பண்பாடு பிறரைப் புண்படுத்தாமல் வாழும் சஹ்ருதயம் போன்றவை பற்றி நமது கதாகாலட்சேபங் களிலும், தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளிலும், திருக். குறள் பிரசாரங்களிலும் நிறையவே உரக்கப்பேசுகிருர்கள். ஆளுல், நடை முறையில், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகி வருகிறது நமது பண்பாடு. கடந்த காலப் பண்பாடு- புருவுக்காகச் சிபிச் சக்ரவர்த்தி தன்னுடைய உடம்பை அறுத்துக் கொடுத்தது, மனு நீதிச் சோழன் தன் மகனேயே தேர்க் காவில் இட்டுக் கொன்றது. எல்லாம். இன்றைய நமது சிறப்புக்கள் ஆகிவிடப் போவதில்லை. அதே போல்தான், இராமாயண, மகாபாரதப் பண்பாடுகளும் இன்றைய நமது பண்பாடுகள் ஆகிவிடப்போவதில்லை.

நாம் பெருங்காய வாசனையைக்கூட இழந்த வெற்று டப்பாக்களாக இருந்து கொண்டே ஒரு காலத்தில் எங்களில் பெருங்காய வாசனை இருந்தது, அதற்கும் முன்பு பெருங் காயம் கூட எங்களுக்குள் இருந்தது’ என்று புலம்பிக். கொண்டு இருப்பதில் பயனில்லை.

இன்றைய நமது பொது வாழ்வின் சகலதுறைகளிலும் சோற்றுப்பஞ்சம், துணிப் பஞ்சம், தண்ணிர்ப் பஞ்சத்தை விடப் பண்பாட்டுப் பஞ்சம் பயங்கரமாக இருக்கிறது என்பது என் கருத்து. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/51&oldid=562293" இலிருந்து மீள்விக்கப்பட்டது