பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e. 。 லா. ச. ராமாமிருதம் : 205 இரண்டு நாட்களேனும் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்கள் தின்பதற்காகத் தயாரித்து அம்மா டப்பாவில் அடைத்து வைத்திருக்கும் நொறுக்குத் தீனி எக்கச்சக்க மாகத் திடீரெனக் குறைந்திருப்பது கண்டு இரைவாள். தண்டிக்க வரும்போது, அண்ணா: "சின்னப் பையன், பின்னே எப்படி இருப்பான்?" "உங்களுக்கு உங்கள் பாடத்தோடு போச்சு. உடம்புக்கு வந்தால் பட்றவள் நானுன்னா!" o "அவ்வளவு அக்குலா உனக்கு இருந்தால், குழந்தை களின் கண்ணில் படாமல், கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். இத்தனை வயது எனக்காச்சு. ஆஸ்து மாவில் அவதிப்படறேன். சபல புத்தி போறதோ?” அண்ணாவின் நோக்கு முறைக்கு இது ஒரு மாதிரி. மறுநாள் வயிற்று வலியிலும், வயிற்றுப் போக்கிலும் அவஸ்தைப் படும்போது, அண்ணா: “ஏண்டா பையா, நான் என்ன பண்ணட்டும்? நீ பண்ணினதுக்கு நீ படறே!” அண்ணாவின் நோக்கு முறைக்கு இது இன்னொரு மாதிரி. முதல் குற்றத்தை உடனேயே ஒப்புக் கொள்ளாததால் அதை மறைக்க மற்றொன்று, அடுத்து அதன்மேல் ஒன்று. விளையாட்டுப் பொய், வெள்ளைப்பொய், அதை ஸ்தாபிக்க கறுப்புப் பொய், விபரீதப் பொய், விஷப் பொய், அப்புறம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று கடைசி வரை வக்கிரப் பிடிவாதம். இப்படி வாழ்வே ஒரு பொய்ச் சங்கிலியாக. இந்தத் தொடருக்கு முடிவுதான் எங்கே? அல்ல, முடிவே கிடையாதா? கணக்குத்தான் கசப்பு. அண்ணா கற்றுக் கொடுத்த விதத்தில், வெகு சீக்கிரமே ஆங்கிலத்தில் ருசி கண்ட