பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 249 ஒன்றிலிருந்து ஒன்றாகப் புறப்பட்டுக் கொண்டே அம்மா எப்பவுமே இப்படித்தான். 玄 女 ★ 'அம்மா உனக்கு தெய்வத்தின் மேல் நம்பிக்கை உண்டா ?” கையை விரித்துப் புன்னகை புரிந்தாள். உதடுகளின் மேல் படிந்த இரண்டு விரல்கள் அடியிலிருந்து: "திருடனுக்கும் கன்னக்கோல் சாத்த ஒரு சுவர் மூலை வேணும்.” என் கேள்விக்குப் பதில், அவன் பதிலில் இல்லாமல் இல்லை. ஆனால், ஒரு மாதிரி கையில் அகப்படாத பதில், ★ 女 女 ஒரு சமயம் என் ஆணவத்தின் மதர்ப்பில்: "ஏம்மா, யார் யாரோ, லா.ச.ரா. வைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். நீயும் பார்த்துண்டு தானிருக்கே ஆனால், அதுபற்றி ஒரு தரமேனும் உன் வாய் திறந்து பாராட்டாக எனக்கு ஒரு வார்த்தை கிடையாதா? வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி-" மறுபடியும் அந்தப் புன்னகை. "டில்லிக்குப் பாச்சாவானாலும், தல்லிக்குப் பிட்டா தானேடா ? ஏண்டா, நானில்லாமல் நீ தனியா முளைச்சையா?” இது பதிலா? ஏன் இல்லை?