உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 97


சீக்கிரமே வீடு கட்டி, குரோம்பேட்டைக்குப் போய் விட்டான். எங்கள் சந்திப்புக்கு வாய்ப்புக்களும் குறைந்து போயின. எப்போதேனும் ரயிலில் சந்தித்தால் உண்டு. எங்கள் தண்டவாளங்கள் மாறிவிட்டன. எங்களுக்கு

ஒருத்தருக்கொருத்தர் நோமில்லை.

கண்ணில் படவில்லை, மனதிலும் படவில்லை.

நான் உத்தியோகத்தில் உழன்று மாற்றம் ஆகி, அங்கு உழன்று, முறையாக ஓய்வு பெற்றுச் சென்னைக்குத் திரும்பி ஆச்சு, ஒன்பது வருடங்கள்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கல்யாணப் பத்தி ரிகை வந்தது, ஒரு பத்திரிகை ஆபீஸிலிருந்து திறாப்பப் பட்டு. வதுக்களின் பெயர்கள், அழைப்பவர் பெயர் எல்லாமே புதுசு.

ஆனால் ஊன்றிப் படித்தபோது-

என் சகோதரியும் லேட் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸனின் இரண்டாவது சௌபாக்கியவதி வேதாவை,

புத்திரியுமான

எஸ். ஆர். ஸ்ரீனிவாஸன்? லேட்? என்னைவிடப் பத்து வயது இளையவன். என்ன அக்ரமம்! ஆனால் அவன் தானா?

கல்யாணம் மைலாப்பூரில். நான் அடைந்த நேரம், மத்தியானச் சாப்பாடு முடிந்து, வரவேற்புக்கு முன், சந்தடி சற்று ஓய்ந்த நேரம்.

நறுவலாக ஒரு ஸ்திரீ, முப்பது வயதிருக்கலாம். எதிர்ப்பட்டாள்.

"கல்யாணப் பெண்ணின் தாயாரைப் பார்க்க முடியுமா?"

"என்னோடு வாங்கோ."

சிந 7