பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டிலகனிகென்
பண்ணி ருந்தவாய வெளுத்தில பயன்பெறும்படியே"[1]
"சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிருவுதரம்
பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்திலபொருப்புங்
கறுத்தி ருந்தில பசுநரம் பெழுந்திலபொருப்புங்
கறுத்தி ருந்தில் பசுதரம் பெழுத்தில கவின்கள்
வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும்விதமே.[2]

அப்துல்லாவின் மரணத்திற்குப் பின் வறுமையில் வாடிய ஆமினாவுக்குத் தன் குழந்தையைச் செவிலித் தாயமைத்துப் பாலூட்டி வளர்க்க வாய்ப்பில்லாதிருந்தது. அலிமா என்ற பெண் அண்ணல் முகம்மதுவுக்குப் பாலூட்டி வளர்க்க முன்வந்தபோது, உள்ளம் உருகி, தன் நிலையை வறுமையிலும் செம்மையாக எடுத்துச் சொல்லி உதவி மறுக்கின்ற பண்பினை,

"பெறுமொரு தந்தையு மில்லைப் பின்னிய
வறுமைபெத் தீம்தரு மதலை யுண்டுகொ
லறிவுற முலை கொடுத் தாக்கஞ் செய்வதற்
குறுவதோ நும்மன மென்ன வோதினார்,"[3]

என்று விளக்குகிறார் ஆசிரியர்.

நபிகள் நாயகத்திற்குப் பாலூட்டி வளர்க்க இசைந்த அலிமாவுடன் ஆமினா தன் பிள்ளையை வழிகூட்டி அனுப்பிய


  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 62
  2. 2. சீறா ந்யியவதாரப் படலம் 63
  3. 3. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 34