பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186


நமது யிர்க்குயி ராகிய முகம்மது நபியே
கமைத ருங்கட லேயெனப் போற்றினர் கனிந்தே ’’

[1]

'மாற்றலருக் கரியே' என்று மைந்தனை வாழ்த்தி, அலிமாவைத் தன் உடன் பிறந்தாளாகப் போற்றிக் கட்டியனைத்து 'அலமாவே, இந்த முகம்மது என் பிள்ளையல்ல, உன் பிள்ளையே என்று கையில் கொடுத்து அனுப்புகிறார் ஆமினா.

எவரையும் தமராய்க் கொள்ளும் எளிய அன்பும், தெய்வத் தொண்டனின் திருத்தாயின் தாயன்பும் உமறுவின் பாக்களிலே ஒன்றி நிற்கின்றன.

இரண்டாண்டுகளுக்குப் பின் பால் மறப்பித்தபின் நபிகள் நாயகத்தைக் கொண்டு வந்து ஆமினாவிடம் சேர்க்கின்றாள் அலிமா, பிரிந்த மகனைப் பெற்ற தாயின் பேரு வகையை இதோ எதிரொலிக்கின்றார் புலவர்.

'மடந்தையர் சிறந்த வாமினா வென்னு
   மலர்க்கொடி முகம்மதை வாங்கி
யிடம்பெறப் பிறழ்ந்து சிவந்தவே லென்னு
   மிணை விழி முகத்தொடுஞ் சேர்த்திக்
குடங்கையி லேந்தி மார்புறத் தழுவிக்
   குமுதவாய் முத்தமிட் டுவந்து
கிடந்தன மனத்திற் றுயரெலா மகற்றிக்
   கிளர்தரு முவகையிற் குளிர்ந்தார்.

[2]

'புனித முகம் மதுவைப் பாலூட்டி வளர்த்த தாயிடம் ஆமினா காட்டிய நன்றிப் பெருக்கு நல்லவர் உள்ளத்தில் நன்றியுள்ளோர் உள்ளத்தில் நின்று மகிழ்வூட்டும் பெற்றியுடையது.


  1. 1. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 63
  2. 2. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 94