பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188


'கண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி

யண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப்

பெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பர்."

[1]

ஆம்! நீர்மையுடையார் நெஞ்சத்தில் நினைவாகிவிட்டார் அன்னை ஆமினா, அன்பே உருவாய் துன்பமே துணையாய் வறுமையே வழிகாட்டியாய்க் கொண்டு-மக்கள் துணையின்றி மலக்குகள் துணையாலே வாழ்ந்து மறைந்த ஆமினா நிலத்திலும் எண்மடங்கு பொறுமையுடையவர் என்பது வெள்ளிடை மலையாய் விளங்குகின்றது.

அலிமா

பெருமானார் (சல்) அவர்களின் வளர்ப்புத்தாய்
-செவிலித் தாய் அலிமா
அலிமாவையும் அழகுப் பாவையாகவே
சித்திரிக்கிறார் உமறுப்புலவர்,
அலிமாவின் தோற்றப் பொலிவினை,
ஆயிழை யெனுமலி மா 6:28
இலங்கிழை யலிமா 7:10:7
செகமகி ழலிமா வென்னுந் திருந்திழை 7, 24
காரிகை யலிமா 7:37

என்றும்,

அவருடைய குழலழகினை,
மன்ற லங்குழ லாள லி மாவெனு மடந்தை 6:5
அவ்வலங் குழலலிமா 6:36

என்றும்,

அவளுடைய வடிவத்தினை,
புதிய நல்வடி வாகிய பூங்கொடி யலிமா 6 : 49

  1. 1. சீறா. மணம்புரி படலம் 57