பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

குறைஷிகளின் பிரதிநிதியான சுகையில் என்பவன் அந்தச் சொற்றொடரில் உள்ள பிஸ்மில்லாஹ் என்பதனை அறிவோம். ஆனால் அர் றஹ்மானிர் றஹீம் என்பதினைக் கேட்டதில்லை என்று கூறினான். கூறினதோடு அச்சொற்றொடரை உடன்படிக்கையில் எழுதவும் வேண்டாம் என்றும் கூறினான். இக்கருத்துக்களைக் கூற முற்பட்ட உமறுப்புலவர் அத்திருமறைச் சொற்றொடரை இவ்வாறு அமைத்துப் பாடியுள்ளார்.

“இன்புறும் பிகமில் லாகிற் றகுமா னிற்றகீமென்
றன்புறு முதலிற் கோட்டென் றகுமது வந்து கூற
முன்புறு சுகைலென் போனு மொழிகுவன் பிசுமில் லாவின்
றன்பெயர் நடக்கும் வண்ண மறிகுவந் தரணி மீதில்”[1]
“அற்றகுமா னிற்றகீ மென்ன வறைகின்ற வார்த்தை யாங்க
டிறனுறக் கேட்ட தில்லை யம்மொழி தீட்ட வேண்டா”[2]

சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறபுச் சொல்லை எடுத்துக் கொள்வோம். அந்தச் சொல் ‘ஈமான்’ என்பதாகும். ஈமான் என்றால் நம்பிக்கை அல்லது விசுவாசம் கொள்ளுதல் என்று பொருள்படும். அது ஈமான் முபஸ்ஸல் என்றும் இருவகைப்படும். அல்குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றின் போதனைகளை விசுவாசம் கொள்ளுதல் எனக் கூறுதல் ஈமான் முஜ்மல் எனப்படும். அல்லாஹுத்த ஆலா மீதும், மலக்குகள் மீதும், வேதங்கள் மீதும், நபிமார்கள் மீதும். இறுதித் தீர்ப்பு

  1. உமுறாவுக்குப் போன படலம் 79
  2. உருறாவுக்குப் போன படலம் 80