பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406


"மறுவிலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபிபிறந் தனரே." [1]

எனும் இனிய பாடலில் அமைந்துள்ள அரிய உவமையைப் பலரும் அறிவர். இதில் மறுவிலா தெழுந்த முழுமதி எனும் தொடரில் கருத்தாழம் மிகுந்துள்ளது

உதித்த, தோன்றிய முதலிய பிற சொற்கள் இருக்க எழுந்த' எனும் அடைமொழியை அமைத்துள்ளார். எழுந்த' எனும் சொல் வீறுடையது; எழுச்சியுடையது. நபிகள் நாயகம் அருளாலும் அரிய நேர்மைத் திறத்தாலும் மாக்களாக வதிந்த மக்களைத் திருத்தினார்கள்; மனிதப் புனிதர்களாக மாற்றினார்கள். கொடியவரைத் தடுத்து அடியவரைக் காக்க வாளெடுத்துத் தற்காப்புப் போரிடவும் செய்தார்கள். 28 ஆண்டுகளில் அண்ணலாரின் செந்நெறி எந்நிலமனைத்திலும் பரவியது. இவர்களைப் போன்று வெற்றி பெற்ற மத போதகரோ-அறப் பெரியாரோ இல்லையென அறிஞர் போற்றுகின்றனர். எழுச்சிமிக்க சமுதாயச் சிற்பியின் பிறப்பை 'எழுந்த' என்னும் அடை மொழி குறைவாக உணர்த்துகின்றன.

உலகில் சீர்திருத்தச் செம்மல்கள் பலர் தோன்றியுள்ளனர். இவர்களெல்லாம் முழுமதி போன்று அருள் ஒளி கொண்டு விளங்கியவர்களே. அண்ணல் நபிகளோ குறையொன்றிலாது முழுமை பெற்றவர்கள். எனவேதான் மறுவிலாதெழுந்த முழுமதி என மகிழ்ந்து கூறுகின்றார் மறுவிலாத மதி இல்லை. இவ்வாறு இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல் பொருள் உவமையாகும்.

"பானுவின் கதிரால் இடர் உறுங் காலம்
   படர் தரு தரு நிழல் எனலாய்
ஈனழும் கொலையும் விளைத்திடும் பவநோய்
   இடர் தவிர்த்திடும் அருமருந்தாய்

  1. 1 சீறா நபியவதாரப் படலம் 92