பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 139 தபால்காரர்! கையில் கடிதம் எடுத்து வருவார்! காலை மாலை வந்து போவார்! பையைத் தோளில் மாட்டியிருப்பார்! பணமும் நமக்குக் கொண்டு வருவார்! அன்புச் சேதி கொண்டு வருவார்! அச்சச் சேதி கொண்டு வருவார்! இன்பச் சேதி கொண்டு வருவார்! இழவுச் சேதி கொண்டு வருவார்! செய்தித் தாளைக் கொண்டு வருவார்! சிப்பக் கட்டு கொண்டு வருவார்! வெய்யில் மழையைப் பார்க்க மாட்டார்! வேலை ஒன்றே கண்ணா யிருப்பார்! முண்டாசு தலையில் கட்டி யிருப்பார்! முத்திரைப் பட்டை போட்டி ருப்பார்! கண்டால் நம்மை வணங்கி நிற்பார்! கண்ணிய மாகத் தொண்டு செய்வார். •+ -ī- of