பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 43 மிக அழகு! அன்னம் போல மிதந்தசைந்தே ஆற்றில் செல்லும் படகினும் மின்னும் வானம் தனில் மிதக்கும் மேகக் கூட்டம் மிக அழகாம்! ஆற்றைக் கடக்க இருகரையை அணைத்தே எழுப்பும் பாலத்தினும், காற்றில் கரையா வானவில் காணக் காண மிக அழகாம்! மெத்தப் படித்து பெற்றிட்ட மேலாம் தெளிந்த அறிவினினும் சத்த மின்றிச் செய்கின்ற தரும அன்பே மிக அழகாம்! •+* *** **