பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 159 பூனைகள்! பூனை எத்தனைப் பூனை? - எல்லாம் பொழைக்கத் தெரிஞ்ச பூனை! சேனைக் கணக்காப் பூனை! - பல தேசி யத்துப் பூனை! தாடிப் பூனை ஒன்று! - கொஞ்சம் தடிச்ச பூனை ஒன்று! மாடிப் பூனை ஒன்று! - கீழே மட்டிப் பூனை ஒன்று! குள்ளப் பூனை ஒன்று! - உள்ளே குமுறும் பூனை ஒன்று! கள்ளப் பூனை ரெண்டு! - முதலைக் கண்ணிப் பூனை ரெண்டு! பட்டைப் பூனை ஒன்று! ராகப் பஜனைப் பூனை ஒன்று! வெட்டிப் பூனை ஒன்று! - வெத்து வேட்டுப் பூனை ஒன்று! பூனை எல்லாம் பூனை - ரொம்பப் பொழைக்கத் தெரிஞ்ச பூனை! ஆனை கூட அஞ்சும் - ஆமாம், பானை சட்டித்தான் மிஞ்சும்!