பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 167 கணக்கு ! கணக்குத் தெரிய வேண்டும்! - நன்குக் கற்றுத் தெளிய வேண்டும்! - பிணக்குப் பிழைகள் இன்றிக் - கணக்கைப் பெரிதும் அறிதல் நன்றாம்! ஒன்றாய், இரண்டாய் மூன்றாய்த் - தொடரும் ஒவ்வொரு எண்ணும் கணக்கே! என்றும் எங்கும் கணக்கே! - வாழ்வில் எந்தச் செயலும் கணக்கே! கூடும் எண்கள் தொகையே - கணக்கின் குறிப்பால் வகுக்கும் எல்லை! போடும் கணக்குத் தவறின் - எந்தப் பொறுப்பும் கொடுக்கும் தொல்லை! அறிவு என்பது சோலை! - அதற்கு ஆண்டவன் கணக்கே வேலி! நிறைவு என்பதும் கணக்கு! - ஞாயம், நீதி என்பதும் கணக்கே! •:- - - - -