பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 69 பெரிய பாலம்! உதயம் தோறும், நிமிடம் தோறும் உனது வாழ்க்கை சிரிக்கவே இதயம் தோறும் இன்பம் ஊற்றும் இரகசி யத்தைக் கேளடா! நேரம், நிமிஷம் காலம் அனைத்தும் நினைத்து முயன்றே செயல்படு! வீரம், சக்தி, வேகம் அனைத்தும் விளைக்கும் விதையே எண்ணமாம்! பாடிக் கூடிக் குலவி لاهالى ஆசை நேசம் காட்டிடு! தேடி வந்து பரிவு காட்டும் தெய்வ அன்பே பொக்கிஷம்! பிஞ்சு மழலைக் கொஞ்சம் தமிழைப் பேசக் கேட்டு மகிழ்ந்திடு! நெஞ்சு முழுதும் விளக்கு ஏற்றும் நேச தேவதை குழந்தையே! அழுத கண்ணி துடைக்கும் விரல்கள் ஆண்ட வனின்து துவர்கள்! பழுதி லாத பாசம் ஒன்றே பாலம் பெரிய பாலமாம்!