பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 191 காவிச் சிவப்புக் கோலமாம்! கருப்பு, மஞ்சள் கோலமாம்! தூவி வைத்தப் பூக்களாய்த் தூய வெள்ளைக் கோலமாம்! இழுத்து இழுத்துச் சுழித்து இங்கும் அங்கும் இணைத்து அழுத்த மாகக் கைகளால் அம்மா வரைந்த கோலமாம்! குப்பி பாட்டி வாழ்த்தவும், கோபு, பாலு வியக்கவும், அப்பா கூட மகிழவும் அம்மா போட்டக் கோலமாம்! , -ī- 4- of