பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்டிக் குள்ளே நீந்தி நீந்திச் சோர்ந்து போன மீன்களை விட்டு வந்தேன் ஆற்று நீரில் விரைந்து நீந்தி மகிழவே! விடுதலை விடுதலை விடுதலை முன்பு ஒருநாள் பிடித்து வந்த மின்னி டும்பொன் வண்டினை கொன்றை மரத்தில் காலை நேரம் கொண்டு சேர்த்தேன் மீண்டுமே! விடுதலை விடுதலை விடுதலை சுதந்தி ரத்தை நாம் அடைந்த தூய்மை யான நாளிலே உதவி செய்தேன்; அதனை எண்ணி உள்ளம் துள்ளு கின்றதே!