பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மொத்தம் நண்பர்கள் பத்துபேர்
நித்தம் எனக்கே உதவிடுவார்.

நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.


பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத இருநண்பர்.

உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.

இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன்!

என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்

உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் யார்யார் தெரிகிறதா?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.

53