பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


நாளை கொண்டாடும் போது வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்களின் எண்ணும் பல நூறு மடங்கு இதனினும் அதிகமாக இருக்குமே. அவர்களையெல்லாம் நான் எப்படி வரவேற்றுச் சமாளிப்பேன் என்பது பற்றித்தான் கவலை கொள்கிறேன்” என்றான் அந்த கோடிக்கதிபதி.

50. அக்கறையற்ற தையல்காரன்

ஆடை ஒன்றிற்கு துணியினைக் கத்தரிக்க, தையல்காரன் அழைக்கப்பட்டான். வந்தவன் வேலையில் கவனம் செலுத்தாது, அக்கறையற்றுக் காணப்பட்டான். வாடிக்கையாளர் கேட்டபோது, “உங்களுக்குப் பொருந்தும் வண்ணம் துணியைக் கத்தரித்தால் எனக்கு எதுவும் மிஞ்சாது; ஒரு முழம் துணியை நான் எடுத்துக் கொண்டால், ஆடை அளவு உங்களுக்கு மிகவும் சிறியதாக இருக்கும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் தையற்காரன்.

51. மதுவிலக்கு

தனியார் விருந்தொன்றில் கலந்துகொண்டார் துறவி ஒருவர். துறவி புனிதமானவர் என எண்ணிய விருந்தளிப்பவன் “தங்களுக்கு மது பரிமாறப்பட வேண்டுமா?” என்று துறவியிடம் கேட்டான். “நான் கொஞ்சம் குடிப்பவன்தான். ஆனால் சைவ உணவை முற்றிலும் ஒதுக்குபவன்” என்றார் துறவி.