பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


சீமானோ எப்போதும் “வேலைக்காரர்களால் ஏற்படும் நன்மைகளை நான் நன்கறிவேன். ஆனால் அவர்களுக்குக் கூலியும், உண்ண உணவும் கொடுக்க வேண்டுமே. ஆகவே தான் என் பணிகளை நானே செய்துவருகிறேன். வேலைக்காரர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்று விடையளித்து வந்தார்.

எப்படியேனும் செல்வருக்கு ஒரு வேலைக்காரனை அமர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர், “என்னுடைய வீட்டில் நான் ஒரு வேலைக்காரன் வைத்திருக்கிறேன். அவனுக்கு உணவோ கூலியோ கொடுக்கத் தேவையில்லை. எனினும் அவன் திறமையாக பணிகளைச் செய்வான். உங்களுக்குப் பணிபுரிய நான் அவனை இலவயமாகத் தருகிறேன். நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றார். சற்று நேரச் சிந்தனைக்குப்பின் செல்வர் கேட்டார். “உணவு உண்ணவில்லை என்றால் அவன் இறந்துவிட மாட்டானா?" என்று. “இந்த வேலைக்காரன் சிறுவனாய் இருக்கும்போது தேவதை ஒன்றைச் சந்தித்தானாம். அந்தத் தேவதை இவனுக்குக் காற்றை உண்டு, புகையை வெளியிட்டிடு, என்று வேறு எதையும் புசியாது வாழும் வரம் நல்கினாளாம். எனவே அவனுக்குப் பசியெடுப்பதே இல்லை” என்று விடையளித்தார் நண்பர்.

அதனைக் கேட்டதும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் அந்தச் செல்வர். பின் மெதுவாய்ச் சொன்னார் “வேண்டாம் மிக்க நன்றி எனக்கு அப்படிப்பட்ட வேலைக்காரன் வேண்டாம்” என்று. “ஏன்?” என்றார் நண்பர். “எனது கழனிகளுக்கு வேண்டிய உரத்தில் ஒரு பகுதியையாவது அந்த வேலைக்காரனின் கழிவில் இருந்து(மலம்) பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் சொல்கின்ற வேலைக்-