பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ so

என்றார். உடனே இவர், "ஆடையை விலக்கினால் பால் தெரியும்" என்றார். (பால் - ஆண்பால், பெண்பால்)

பாலும் ஆடையும்

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த ரங்கநாதபுரத்தில் ஒரு திருமணம். அதில் பேசச் சென்றிருந்தார். இவர். பேசும்போது இடையிடையே தொண்டை வற்றாமல் இருக்கப் பால் தந்தார்கள். பேச்சு முடிந்தவுடன் கல்யாணப் பெண்ணின் தந்தை இவருக்கு ஆடை பரிசளித்தார். இவர், "முன்பு பால் கிடைத்தது; இப்போது ஆடை கிடைக்கிறது" என்றார்.

உள்ளத்தை இவர் GLಶಣಹಣಿಮೆ சொன்னது :

அந்தப் பெண் தன்னுடைய அன்பை எடுத்துச் சொன்னாள். காதலனுக்கும் தனக்கும் உள்ள ஒட்டுறவைச் சொன்னாள். அவள் தந்தை அவள் அந்த இளைஞனைக் காதலிப்பதை அறிந்து அவளை மிரட்டிக் கேட்டார்; "உள்ளத்தைச் சொல்; என்ன நடந்தது?" என்றார். "என் உள்ளத்தைத் தான் சொல்கிறேன். உள்ளத்தைத்தான் சொல்கிறேன்; இல்லாததைச் சொல்லவில்லை" என்றாள்.

மேனாவோடு

இவர் தேவகோட்டையில் சேக்கிழார் திருநாளில் பேசப் போயிருந்தார். அமரர் தமிழ் வள்ளல் மெய்யப்பச் செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அவரை மேனா என்று சொல்வார்கள். செட்டியார் திருவாடானையைப்