பக்கம்:சிரித்த நுணா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. புதிய கொன்றைவேய்ந்தோன் தனித்தமிழ்க் கொன்றைத் தாரினைச் சூட்ட நினைத்தேன் தமிழ்த்தாய் நீளடி கட்கே ! அடிமை வாழ்விற் கிடங்கொடுக் காதே. ஆண்டான் அடிமை வேண்டாம் நாட்டில். இழிந்தவர் உயர்ந்தவர் பிறப்பில் இல்லை. ஈயென இறத்தல் இறப்பிலும் வேண்டாம். உழைப்பவர் நாட்டின் உயிர்நாடி யாவார். ஊருக் குழைப்பது சீரிய பணியாம். எடுபோர் வாளேக் கொடுமையைக் கண்டால். ஏதிலார்க் கினிமேல் இடங்கொடுக் காதே. ஐயம் அகற்ற அஞ்சவே வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் மொழிதொழில் உயர்த்து. ஒதுவ தெல்லாம் தாய்மொழி யாக்கு. ஒளவை மொழியும் ஆய்ந்து கொள்க. கற்றலுங் கேட்டலும் பெற்ருல் உயர்வாம். காப்பது நாட்டைக் காளேயின் கடனே. கிளிமொழிக் குயர்வே அளித்துப் போற்று. கீரையும் பகிர்ந்து ஊருடன் உண்ணே. குறைகூறு முன்னுன் குறைகளே எண்ணு. கூடிப் பழகிக் கேடெண் ணுதே, கெஞ்சி வாழ்தல் நஞ்சினும் கொடிது. கேட்டிலும் உறுதி காட்டிட வேண்டும். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/30&oldid=828817" இலிருந்து மீள்விக்கப்பட்டது