பக்கம்:சிரித்த நுணா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ்த்தாய் நிலையம் வாழ்க! உலகினில் உழவர் தத்தம் உழைப்பினுல் பசியை ஒட்டும் தலையாய அறத்தைச் செய்து தழைத்தனர்; அவர்கட் குள்ளே விலையிலா மணிகள் வாழும் அரும்பார்த்த புரத்துள் வீரத் தலையினை நிமிர்த்தி நிற்கும் "தமிழ்த்தாயின் நிலையம் வாழ்க! மாந்தரின் மடமை யோட்ட, மக்களின் அறிவைத் தீட்டத், தீந்தமிழ் மொழியைக் காக்கச் சிருர்க்கெலாம் கல்வி ஈந்து, வேந்தர் நாம் இந்த நாட்டில்! வேற்றுமை வேண்டாம்!” என்றே ஏந்தல்சேர் தமிழ்த்தாய் நிலையம்' இன்னுரை பயிலும்! வாழ்க! என்றவள் பிறந்தாள்?’ என்றே இதுவரை அறியாத் தொன்மை, குன்றிடா இளமை, தேனிற் குறைகாணும் இனிமை, வான மன்றிலே தவழும் வட்ட மதிதரு தண்மை பெற்றே நின்றனள் தமிழ்த்தாய் என்னும் நிலையத்துள்! வாழி! வாழி! '79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/86&oldid=828878" இலிருந்து மீள்விக்கப்பட்டது