பக்கம்:சிரித்த நுணா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வாழ்க தமிழன்பன்! பிறந்தநாள் அறிய வொண்ணுப் பெற்றிசேர் தமிழே! உன்னை மறந்ததால், அந்தோ! மக்கள் அடிமையில் வாழு கின்ருர்! திறம்பெறு தோளும், கொள்கைக்(கு) உயிர்விடும் உளமும் சேர்த்தே மறத்தமிழ் உணர்வை யூட்டத் "தமிழன்பன்' வந்தான்! வாழி! மனிதனை மனிதன் ஆளும் வழக்கத்தை வெட்டிச் சாய்க்கும் தனித்தமிழ் வாளெ டுத்தான்! தமிழ்நாட்டுக் கலேயை, வாழ்வைப் பன்மொழிச் சவுக்கால் தட்டிப் பண்டையர் வளத்தைச் சேர்த்தான்! நனிபுகழ் நாட்டில் நன்கு "தமிழன்பன் வாழ்க மாதோ! இளையவர்க் கடக்கம் தூண்டி எடுத்துளம் தூய்மை தேக்கித் தளையற்றுத் தமிழர் வாழச் சளேக்காதிங் குழைத்து நாணல் முளையெயிற் றினிய சொல்லார் விடுதலை முழக்கம் செய்ய வளமைக்கா வேரி யாருய்த் * தமிழன்பன் வாழ்க மாதோ! 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/93&oldid=828886" இலிருந்து மீள்விக்கப்பட்டது