பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 147

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்டு

இல்லையென்பது குற்றம்! மனிதர்கள் சாகும் வரை மாணவர்கள்தான் என்று ஒரு சேஷப் பய்யர் கூறியிருக்கிறார். -

அது யார் சேஷப்பய்யர்.

அவர்தான் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் காவேரிக்கரை கிராமத்தில் பிறந்து இங்கி லாந்திக்குப் போய் நாடகம் எழுதினார், சேஷப் பய்யர், ஷேக்ஸ்பியரானார். ஜெகப் பிரசித்தி பெற்றார். இது நம்ம ஆராய்ச்சி. - ஒகோ அப்படிச் சொல்லுதா உங்க ஆராய்ச்சி! இதோ நம்ம ஆராய்ச்சியைச் சொல்றேன் கேளு. போன ஜன்மத்திலே அந்த ஷேக்ஸ்பியர் தோட்டத்திலே புகுந்து பழத்தை திருடின ரெண்டு கழுதைகள்தான் இந்த ஜன்மத்திலே இங்கே இப்படி இரட்டையர்களாகி அரட்டை அடிக்கின்றனவாம்! எப்படி இந்த ஆராய்ச்சி! உன் ஆராய்ச்சியிலே இடிவிழ! அது போகட்டும். இந்தக் கல்லூரிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். -

எங்கெங்கே அதர்மம் குறைந்து தர்மம் தழைக் கிறதோ அங்கெல்லாம் தோன்றி கலவரம் செய்து குழப்பத்தை உண்டாக்கவே கடவுள் எம்மைப் படைத்துவிட்டான்.

நாங்கள் எடுத்த கொள்கையை கைவிட மாட்டோம். இடது காலை எடுத்து முன்வச்சுட் டோம். இப்போ எப்படி பின் வாங்கிறது! நாங்க தான் வீரர்களாச்சே! முன்வச்சக் காலை பின் வைக்க மாட்டோம்.

ஆமாம், மாட்டோம், மாட்டவே மாட்டோம்.

இரண்டு பைத்தியங்களுக்காக உலகம் மாறி விடாது மனிதா!