இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
சிரிப்பதிகாரம்
- ராணி! என்னை நம்பு, உனக்காகவே நான்
- தவறாமல் எல்லாப் பரீட்சையிலேயும் நல்லா
- தோல்வி அடைவேன் கண்ணே! அதுவே என்
- வெற்றி!
ராணி : ஆஹா! எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறாய்
- பேபி! இதே அன்பு கடைசி வரையிலும்
- இருக்கட்டும்.
பேபி : ஒ கட்டாயம் கடைசிவரை பாஸ் பண்ண
- மாட்டேன். கடைசி என்ற வார்த்தையே நம்
- காதல் அகராதியில் இல்லை கண்ணே!
- I Love you ஜூலியட்
- Yonder the east; Juliet is the Juli Moon
- (சந்திர சூரியர் என்ற மெட்டில் இருவரும் காதல்
- பாட்டு பாடுகிறார்கள்)
சந்திர சூரியர் ராக்கட்டு மாறினும்
வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால்
வேறுலகே வேண்டாம்.