பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கோட்டை அழகிரிசாமி 107

ஏமாந்து போகாதே!” என்று எச்சரிக்கை செய்து நம் வறுமையை மறக்க வழி செய்து தந்தவரும் பெரியார்தான். -

அவரது பொருளாதாரச் சிக்கனமும் சற்று அலாதியானதுதான். "முழுக்கை சட்டையில் மோகம் கொள்ளாதே! நாலு முழுக்கைச் சட்டைகளுக்கு வேண்டிய துணியில், 5 அரைக்கைச் சட்டைகள் தைத்துக் கொள்ளலாமே! வேலை செய்வதில்கூடச் சிக்கனத்தை அனுஷ்டிக்கும்படிச் செய்வார். அதனால்தான் அவர் எப்பொழுதும் அரைக்கைச் சட்டைகளை அணிந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இப்படி எதற்கெடுத்தாலும் சிக்கனம்தான். ஆம், மண்ணும் விண்ணும் கூட இவருக்குச் சிக்கனம் செய்யப்பட வேண்டியவைதான். காரணமின்றி அவர் நமக்குச் சிக்கனம் போதிக்கவில்லை. சிக்கனம் அனைவருக்கும் அவசியமானது, அதுவும் நம்மைப் போன்ற ஊதாரி மக்களுக்குச் சிக்கனக் கருத்து மகா மகா அவசியமானது. எதையும் வீணாக்குவதுதான் நமது பழக்கம். பாருங்கள்! இந்த மேசை மீது குவிந்து கிடக்கும் இந்த மலர் மாலைகளால் யாருக்கு என்ன லாபம்? இம்மாதிரி எத்தனை மாலைகள் அன்றாடம் பாழாகின்றன? நம் நாட்டில் மாலை அணிவித்தல் என்ற அர்த்தமற்ற சடங்கால், தினம்தினம் எத்தனை ஆயிரம் ரூபாய்கள் பாழாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை ஏகர் பூமிகள் வீணாக்கப்படுகின்றன என்பதைப் பற்றிச் சிந்தித்ததுண்டா? மலர் மாலை அணிவித்தலை விட்டு துணிமாலையாவது நூல் மாலையாவது அணிவித்தல் வேண்டும், மற்றவர்கள் செய்யாவிட்டாலும் நாமாவது, நாசகரமான இப்பழக்கங்களைக் கைவிடல் வேண்டுவது முக்கியம். இவற்றை யெல்லாம் கூட நமக்கு விளக்கிக் காட்டியவர் பெரியார்தான்.

இவரைப் பெரியார் ஈ.வெ. ராமசாமி என்றே நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்த வரையில் எனக்குப் பெரியார் வேறு, ஈ.வெ.ராமசாமி வேறுதான்.

ஈ.வெ.ரா.வுக்கு மாடமாளிகைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஏகர் நஞ்சை புஞ்சைகளும் உண்டு. ஒரளவு ரொக்க ரூபாயும் பாங்கியில் உண்டு. ஆனால், பெரியாருக்கு அதெல்லாம் இல்லை. அவருக்கு உலகெல்லாம் சொந்த ஊர்தான். உலக மக்களெல்லாம் அவருக்குச் சகோதர சகோதரிகள்தான்.

நம் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பணமிருக்கிறது என்று மற்றவர்