பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சிறந்த சொற்பொழிவுகள்

இத்தென்னாட்டார் தொன்று தொட்டு கல்வி, கேள்வி, ஞானம், தருக்கம், இலக்கியம், இலக்கணம், இராச தந்திராதி சாஸ்திரங்களை யறிந்து சுதந்திர சுகவாழ்வைப் பெற்றிருந்தார்க ளென்பதற்குத் தமிழ் முச்சங்கங்களே போதுமான சாகூதியமாகும்.

காளமேகப் புலவர் வெண்பாவின்படி நூலா நாலாயிர நானுற்று நாற்பத்தொன்பான், பாலா நூற்று நாற்பத்தொன்பான் - மேலா, நாற்பத் தொன்பான் சங்க மறுபத்து நாலாடறுக்கும், கத்தன் மதுரையிற் சொக்கன்.”

அச்சங்க மேறியவர்கள் 4,449 பெயர்களென்று தெரிவிக்கப் பட்டிருந்தாலும், வீரசோழிய முதலான சில சிறந்த நூல்களைக் கொண்டாராயுங்கால் 549 பெயர்களென்றும், அவர்களில் அகத்தியனார், விரிசடையத்தனார், முருக முதல்வனார், முடிநாகராயர், நிதிக்கிழவனார், அதங்கோட்டா சிரியனார், பனம்பாறனார், தொல்காப்பியனார் முதலானவர்கள் சிறந்து விளங்கி, தொல்காப்பியம், காக்கைபாடினியம், அவிநயம், நற்றத்தம், வாமனம், புறப்பொருட் பன்னிருபடலம், முருவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், பரிபாடல், முதுநாறை, முதுகுருகு, களரியாவிரை முதலிய அருமையான நூல்களை இயற்றினார்கள். அவர்கள் அகத்தியத்தை முதல் நூலாக வழங்கி வந்தார்கள்.

அதில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் மூன்றும் வகுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. தொல் காப்பியம் முதலியவற்றில் இயற்றமிழும்; பெருநாரை பெருங்குருகு முதலியவற்றில் இசைத்தமிழும்: முருவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் முதலியவற்றில் நாடகத் தமிழும் விரித்துரைக்கப்பட்டன.

பிறகு இடைச் சங்கம் கபாடபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சங்க மேறியவர்கள் 509 பெயர். அவர்களில் இருந்தையூர் கருங்கோழி, மோசியார், வெள்ளூர் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையின் மாரன், துவரைக் கோமான், கீரந்தையார் முதலான்வர்கள் சிறந்து விளங்கி, கலிக்குருகு, வெண்டாலி முதலிய நூல்கள் அரங்கேற்றப்பட்டன. இச் சங்கத்தார் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் முதலியவற்றை நூல்களாக வழங்கி வந்தார்கள்.

கடைச் சங்கம் உத்தர மதுரையில் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் சங்க மேறியவர்கள் 49 பெயர். அவர்களில் இறையனார், உக்கிரப் பெருவழுதியார், கபிலர், பரணர், நக்கீரர். பெருந்தேவனார். நச்சுமனார். குலபதி நாயனார். ஆலங்குடி வங்கனார் முதலானவர்கள் சிறந்து