பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிறந்த சொற்பொழிவுகள்

மிராசுதார்களும், சவுகார்களும், செட்டிமார்களும், வர்த்தகர்களும், மனம் வைத்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்தாபிக்கலாகும்.

ஆகவே, பிரபுக்களே! நான் இதுகாறும் சொன்னதை ஒடுங்கிய மனதோடல்ல. விரிந்த கபுத்தியால் யோசனை செய்து பாருங்கள்!

வேதநாயகன் வித்தக வார்த்தைகளின்படி நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டித் துங்க வைத்ததும் தமிழ், நம் மழலைச் சொல்லால் பெற்றோரை மகிழச் செய்ததும் தமிழ், நாம் பிறந்தபோது முந்தி ஆரம்பித்ததும் தமிழ், நமது பெற்றோர் பாலோடு புகட்டினது தமிழ், பெற்றோரும் பெரியோரும் ஆசிரியரும் ஆசாரியரும் ஆதியில் உபதேசித்ததும் தமிழ், அநேக நூற்றாண்டுகளாக நமது ஆதி தாய் தந்தைகள் பேசினதும் தமிழ், எழுதியதும் தமிழ், இப்போது நம் பெற்றோரும் பிள்ளைகளும் பேசுவதும் தமிழ், நமது வீட்டுப் பாஷையும் நாட்டுப் பாஷையும் தமிழ்,

நமது இக பர சாதனத்துக்கு இன்றியமையா திருப்பதும் தமிழ், அகத்தியர் நாவிலே பிறந்து ஆரியத்தின் மடியில் வளர்ந்து, ஆந்திர கன்னடாதி பாஷைகளோடு கூடிக்குலாவி, சங்கப்புலவர் நாவிலே சஞ்சரித்து, வித்துவான்களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசத்தில் சக்கராதிபத்தியஞ் செய்து, சேதுபதியவர்களுடைய குன்றக் கொடையைக் கொடி கட்டிப் பரவச் செய்து பாண்டித்துரை யவர்களுடைய பெருமையைப் பன்னுற்றிரட்டினால் பாரெங்கும் புகச் செய்து கடைசியாக இந்த மதுராபுரியை மண்டலமெங்கும் மேன்மைபடச் செய்ய, மதுராபுரியில் நான்காவது தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்துத் தமிழ்க்கொடியைத் தழைத்தோங்கச் செய்ய வாருங்கள்! வாருங்கள் ! தமிழ்த்தாயே, உனக்கு மங்கள முண்டாவதாக!

(இவ் அறிஞர் பெருமான் ஈரோட்டில் பிறந்தவர்: சேலத்தில் குடியேறி வாழ்ந்தவர்) -