பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார் 37

நீலமாகவும், இன்னும் எந்த நிறத்தைக் காட்டினாலும் அந்நிறமாகவும் அந்தக் கண்ணாடியில் தோன்றும். ஆன்மாவின் இயல்பும் அப்படிப்பட்டதே யாகும். அதனால்தான் தாயுமானவர், -

யாதொன்று சாரின் அதன் இயல்பாய் நின்று பந்தமறு பளிங்கனைய சித்துநீ

என்றார். இதை நாம் பிரத்தியட்ச அனுபவமாகவும் அநேக நாடகங்களிற் காணலாம்.

பிரகலாத நாடகத்தைக் காண்பவரிற் சிலர் நரசிம்ஹாவதாரத்தைக் கண்டதும் தாங்களும் நரசிம்ம வேசம் கொள்ளப் பார்த்திருக்கிறோம். அரிச்சந்திரனும் சந்திரமதியும் தங்கள் பிள்ளையை இழந்து, பரிதவிப்பதைக் காண்போர் தாங்கள் தங்களுடைய பிள்ளைகளை இழந்துவிட்டவர்களைப் போல கண்ணிர் விட்டுத் துக்கிப்பதையும் கண்டிருக்கிறோம். நாடகமேடையில் சிவாலயத்தைக் கண்டு நந்தனார் வேடந்தரித்து வருவோன் கைகூப்பினால் சபையேர்களும் தங்களை மறந்து கைகூப்பி வணங்கி பக்தி வெள்ளத்தில் அழுந்துகின்றனர். இப்படிப்பட்ட உணர்ச்சிகளைச் சிறிது நேரமாவது அனுபவித்தால் மனம் திருந்துவது ஒர் ஆச்சரியமல்லவே. -

சச்சரவிட்டு வாழும் இரண்டு சகோதரர்கள் ஒரிரவு பாதுகா பட்டாபிஷேக நாடகத்தைப் பார்த்து வந்தால் மறுநாள் ஒரு நாளேனும் - அவர்கள் தம் சச்சரவை விட்டு ஒற்றுமை புற்றிருப்பார்கள் என்பது திண்ணம். இவ்வாறே நாடகத்தால் விளையும் நன்மைகள் பல உண்டு. ஆனால் ஒன்று.

நாடகத்தைக் காண்பவர்களுக்கு அது உண்மையாய் நிகழக் கூடியதுதான் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால், அந்த நாடகத்தால் - உண்டாகும் பயன் ஒன்றும் இல்லை என்னலாம். இந்த உண்மை உணர்ச்சியைக் காட்டுவதில் நம் நாட்டு நாடகங்களைவிட மேல் நாட்டு நாடகங்கள் சிறந்து விளங்குகின்றன.

நம் நாட்டவர்கள் பெரும்பாலும் சங்கீதத்தின் பேரிலேயே நாட்டமாய் இருந்து உண்மைத் தோற்றத்தைக் கைவிட்டு விடுகின்றனர். இதனால் சங்கீதத்தைக் குறைவுபடுத்தியதாகக் கொள்ளக் கூடாது. அளவுக்கு மிஞ்சிபைல் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி சங்கீதத்திற்கும்