பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார் 39

உள்ள குறைகள் இவை என்பதும், ஏற்படவேண்டிய சீர்திருத்தங்கள் இவையென்பதும் ஒருவாறு சுருக்கமாய்ச் சொல்லப்பட்டன.

முடிவாக ஒரு விஷயம் சொல்லி எனது உபந்நியாசத்தை நிறுத்தி விடுகின்றேன். மேல் நாட்டில் நாடகமென்பது தலைதுாக்குவதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னமே நம் இந்திய நாட்டில் மகாகவி காளிதாசர், ரீஹர்ஷ தேவர், பவபூதி முதலிய வித்துவச் சிரோமணிகள் சமஸ்கிருத பாஷையில் உலகமெல்லாம் மெச்சக் கூடிய அரிய நாடகங்கள் பல எழுதியிருக்கின்றார்கள். நமது தமிழ்ப் பாஷையிலும் பல நாடகக் கிரந்தங்கள் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனல், நமது புண்ணியக் குறைவால் அவை இப்பொழுது நமது கைக்கு எட்டவில்லை. தமிழ்ப்பாஷை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதனாலேயே இதில் பல நாடக நூல்களும் நாடக இலக்கணங்களும் இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகின்றது.

(சென்னை புரசவாக்கம் தனலட்சுமி விலாச சமாஜத்தில் திருவாளர் எஸ்.பி. சத்தியநாடார் எம்.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் திரு.எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

இதழ்: நல்லாசிரியன் (1920)

இப்பெருமகனார் 'திராவிடன் இதழில் பணியாற்றிய எழுத்தாளர் ஆவர். கல்விச்சாலையில் ஆசிரியப் பணியாற்றிய இவர்தம் மகனும் மகளும், மருகரான தமிழ் மன்னன் எனும் பெயரில் பலப்பல அரியனவற்றை எழுதி வெளியிட்டு வருகிற இராச கோபாலன் அவர்களும் தமிழ் வளர்க்கும் குடும்பத்தினராவர்.