பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனக சங்கர கண்ணப்பர் 55

6. மாயவரம் இளைஞர் மாநாடு (8. S. 1927)

சனக சங்கர கண்ணப்பர்

(மாயவரத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் தலைமை

வகித்து நிகழ்த்திய சொற்பெருக்கின் சுருக்கம்.)

சகோதரர்களே !

பண்டைப் புகழும் பேரும் பெற்ற இம்மாயவரத்தின்கண் நடைபெறும் இளைஞர் மகாநாட்டிற்கு, ஒன்றுக்கும் பற்றா எளியேனைத் தலைவனாய்த் தெரிந்தெடுத்தது பற்றி வரவேற்புக் கழகத்தாருக்கு என் மனமுவந்த வந்தனம் செலுத்துகின்றேன். என்னினும் அறிவுள்ளார் பலர் உள்ளார்கள். இருந்தும் என்னைத் தேர்ந்தெடுத்தது என்பால். நுங்கட்கு இருக்கும் அன்பின் பெருக்கத்தைத் தெளிவுறக் காட்டுகின்றது.

இளைஞர் இயக்கம்

இதுவே நம் மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இளைஞரின் முதலாவது மகாநாடாகும். அத்தகைய மகாநாடுகள் நம்மனோர் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதனவா என்று பலர் நம்மை உசாவுகின்றார்கள். இக்கேள்விக்கு விடை இறுக்க வேண்டுவது நம் கடனாகும். -

இப்பொழுது இளைஞர்களாய் இருப்பவர்கள்தான் நாளை ப்ெரியோர்களாக வேண்டியவர்கள்; இவர்கள்தான் இன்னும் சிலவாண்டுகளுள் நாட்டை ஆளப்போகின்றவர்கள் தலைவர்களாய்த் திகழப் போகின்றவர்கள். ஆகவே, முளையிலேயே இவர்களை நல்ல துறையில் திருப்பிவிட்டால் இவர்கள் குற்றம் குறைபாடு அற்ற தூய மணிகளாய், நாட்டின் விடுதலைக்குழைக்கும் சான்றோர்களாய்த் தன்னலம் விடுத்த பெரியோர்களாய் வாழ்வர். என்னை?

உயிரென்பது ஒரு கண்ணாடி, அஃது எதைப் பற்றியதோ அதன் இயல்பாய், அதன் வடிவாய் நிற்பது. கண்ணாடி தன்னை நோக்குவார்