பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிறந்த சொற்பொழிவுகள்

பதில்லை. எச்சில் இலையை நாய்களன்றோ தின்னும்? முருங்கைக் காயைக் கடித்து மென்று தின்று விட்டுத் துப்பியிருப்பேன்; (சிரிப்பு) அதில் உண்ண வேண்டும். அப்படியில்லாவிட்டால் புருஷன்மேல் பற்றில்லாதவளென்று கூறப்படுகிறது. எச்சிலிலையில் சாப்பிடாவிட்டால், புருஷன் இலையில் சாப்பிடாத தேவடியாள் என்று சொல்லுகின்றன்ர்.

எனக்குக் கல்யாணம் ஆனது முதல், எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன். பெண்கட்கும் சம சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆனால், கல்வி இல்லாத அக்காலத்தில் தீர்ப்பளிக்கும் உரிமை புருஷனிடம் இருக்கவேண்டும். உரிமை பெறப் பெண்கள் போராடுதல் வேண்டும்.

பத்திரிகைச் சண்டை

உள்ளுர் சம்பந்தமாக ஒன்று கூற விரும்புகிறேன். தனவைசியர்களால் நடத்தப்படும் இரண்டு பத்திரிகைகள் கொடிகட்டிச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதனை நான் இலோசாக நினைத்தேன். பிச்சப்பா சுப்பிரமணியன் செட்டியார், 'குமரன் ஆசிரியருக்கும் ஊழியன்’ ஆசிரியருக்கும் நண்பர். பார்க்கும் பொழுது இருவரிடத்திலும் ஒரே விதமான அன்பிருக்கிறதாகவே தோன்றுகின்றது. அவர் தலையிட்டால் இச் சண்டையை ஒழித்து விடலாம். ஆனால் அவர்கள் இருவர்களையும் சமாதானப் படுத்த முடியாதென்று சொல்லுகிறார்கள். சந்தாதார்கள் கூட்டம் போட்டு இம்மாதிரி ஒருவருக்கொருவர் சொந்தச் செய்திகளைக் குறித்துச் சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்க வேண்டும். குமரனில் 'இதோடு முடித்து விட்டோம் என்ற குறிப்பைப் படித்துப் பார்த்தேன்.

(செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.) (இதழ்: திராவிடன், 15.3.1928)